தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றிய இந்தியா

பியாரி சசா , சான்பிதா நங்க்ரம் , லின்டா கோம் செர்டோ ஆகியோர் இந்திய அணியில் கோல் அடித்தனர்.
தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றிய இந்தியா
Published on

கோவா,

6 அணிகள் இடையிலான 8-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பி யன்ஷிப் போட்டி கோவாவில் நடந்தது. நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை தோற்கடித்து 7 ஆண்டுக்கு பிறகு சாம்பியனாக உருவெடுத்தது.

பியாரி சசா (42-வது நிமிடம்), சான்பிதா நங்க்ரம் (46-வது நிமிடம்), லின்டா கோம் செர்டோ (82-வது நிமிடம்) ஆகியோர் இந்திய அணியில் கோல் அடித்தனர்.மொத்தத்தில் இந்த கோப்பையை இந்தியா கைப்பற்றுவது இது 6-வது முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com