நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற ஸ்ரீசங்கர்... ஆக்கி அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஆண்களுக்கான ஆக்கி தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
ஸ்ரீசங்கர்
Published on: 

நகோயா,

நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளிவெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டு

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

நீளம் தாண்டுதலில் வெள்ளி

அந்தவகையில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.07 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஜு யுஹாவ் 8.17 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானின் அன்வர் அன்வரோவ் 8.07 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

மறுபுறம், ஆண்களுக்கான ஆக்கி தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபாரமாக விளையாடி 4 கோல்கள் அடித்தார். ஷிலானந்த் 2 கோல்களும், அபிஷேக், சுக்ஜீத் சிங், ஜுக்ராஜ் சிங் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதன் மூலம் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com