

சென்னை,
மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரு கிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் , பெண்கள் பிரிவு என மொத்தம் 13அணிகள் கலந்து கொள்கின்றன.
ஆண்கள் பிரிவில் லீக் மற்றும் நாக்-அவுட் முறையிலும், பெண்கள் பிரிவில் ரவுண்ட் ராபின் லீக் முறையிலும் போட்டி நடத்தப்படுகிறது. ஆட்டங்கள் தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சமாகும்.