தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய தடகளத்தில் பெரும் முன்னேற்றத்தை காட்டுகிறது - நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய தடகளத்தில் பெரும் முன்னேற்றத்தை காட்டுகிறது - நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

பெர்ன்,

சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

டைமண்ட் லீக் டிராபியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை இது வெளிப்படுத்துவதாகவும், தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய தடகளம் செய்து வரும் பெரும் முன்னேற்றங்களைக் காட்டுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com