சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; பி.வி. சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாசெல்,

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் போர்ன்பிசா சோய்கீவோங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற நேர் செட்டில் சீனதைபேயின் வாங் ஷூ வெய்யை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் 21-19, 15-21, 21-11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லியோங் ஜன் ஹாவ்வை போராடி சாய்த்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com