சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாசெல்,

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவுக்கு எதிராக மோதினார்.

இந்த ஆட்டத்தில் 23-21, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் கிரண் ஜார்ஜ் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவுக்கு எதிராக தோல்வி அடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத் தைவானின் சவு டியென் ஷென்னுக்கு எதிராக மோதினார்.

இந்த ஆட்டத்தில் சவு டியென் ஷென் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் பிரியன்ஷு ரஜாவத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com