சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி
Published on

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com