சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வி கண்ட தமிழக வீரர்

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் சங்கர் சுப்ரமணியன், பிரான்சை சேர்ந்த சி.போபோவ்வுடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சி.போபோவ் 21-10, 21-14 என்ற செட் கணக்கில் சங்கர் சுப்ரமணியனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com