

லக்னோ,
லக்னோவில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், மலேசியாவின் ஜோ ஜின் வெய்யை எதிர்கொண்ட தன்வி, முதல் செட்டில் 2-1 எனப் பின்தங்கியிருந்தார். அப்போது காயம் காரணமாக மலேசிய வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார். இதனால் தன்வி ஷர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் மற்றும் தஸ்னிம் மிர் ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.