

சையத் மோடி பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் துஷார் சுவீர் இந்தோனேசியாவின் ஷுஜிவோவுடன் மோதினார்.
இப்போட்டியில் இருவரும் தொடக்கம் முதலே கடுமையாக போராடினர். முதல் செட்டை துஷார் சுவீர் 21-19 எனக் கைப்பற்றினார். இதற்குப் பதிலடி கொடுத்த ஷுஜிவோ, இரண்டாவது செட்டை 21-19 என வென்றார்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இந்தோனேசிய வீரர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 21-9 என வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 19-21, 21-19, 21-9 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்ற ஷுஜிவோ அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் துஷார் சுவீர் தொடரிலிருந்து வெளியேறினார்.