தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் வெற்றி

இந்தியாவின் உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் உடன் மோதினார்.

தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் வெற்றி
Published on

சென்னை,

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய உன்னதி ஹூடா 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனையான தஸ்னிம் மிர்ரை 21-16, 22-20 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com