தைபே ஓபன் பேட்மிண்டன்: தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம்

இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதினார்.
தைபே ஓபன் பேட்மிண்டன்: தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம்
Published on

சென்னை,

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தன்வி ஷர்மா 21-16, 21-16 என வெற்றி பெற்றார். இதனால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com