பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீரர் சோலைராஜ் தங்கம் வென்று அசத்தல்

மனிஷா பெண்கள் ஒற்றையரிலும் வெண்கலப்பதக்கம் பெற்றார்.


பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீரர் சோலைராஜ் தங்கம் வென்று அசத்தல்
Published on: 

டோக்கியோ,

ஜப்பானில் நடந்து வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 5-வது நாளான நேற்று இந்தியா 7 தங்கம் உள்பட 26 பதக்கங்களை வாரி குவித்தது. இதில் நீளம் தாண்டுதலில் தூத்துக்குடியை சேர்ந்த சோலைராஜ் தர்மராஜ் 7.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியதும் அடங்கும். இதேபோல் பேட்மிண்டனில் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மனிஷா (பிரமோத் பகத்துடன் இணைந்து), நித்ய ஸ்ரீ (கிருஷ்ணா நாகருடன் இணைந்து), ஆண்கள் இரட்டையரில் நவீன் (சூர்யகாந்த் யாதவுடன் இணைந்து) ஆகியோரும் வெண்கலப்பதக்கம் கைப்பற்றினர். அத்துடன் மனிஷா பெண்கள் ஒற்றையரிலும் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சோலைராஜீக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு ஊக்கத் தொகை யாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இரட்டை வெண்க லப்பதக்கம் பெற்ற மனிஷாவுக்கு ரூ.60 லட்சமும், நித்ய ஸ்ரீ. நவீன் ஆகியோ ருக்கு தலா ரூ.30 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com