

சென்னை,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க்கின் அமேலி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.