தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

இந்திய அணி தனது முதலாவது பேட்மிண்டன் போட்டியில் இன்று கனடாவை எதிர்கொள்கிறது.
தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
Published on

ஹோர்சென்ஸ்,

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் உள்ள ஹோர்சென்ஸ் நகரில் இன்று முதல் மே 3-ந் தேதி வரை நடக்கிறது.

தாமஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இன்று கனடாவையும், 2-வது ஆட்டத்தில் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், 29-ந் தேதி நடப்பு சாம்பியன் சீனாவையும் எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் கடந்த மாதம் நடந்த ஆல் இங்கிலாந்து போட்டியில் 2-வது இடம் பிடித்த லக்ஷயா சென். சமீபத்தில் நடந்த ஆசிய பேட்மிண்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்த ஆயுஷ் ஷெட்டி மற்றும் ஸ்ரீகாந்த், பிரனாய், கிரண் ஜார்ஜ், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி, அம்சகருணன் ஹரிகரன்-எம்-ஆர்.அர்ஜூன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஆகியோர் நல்ல நிலையில் இருப்ப தால் இந்திய அணி மீண்டும் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உபேர் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் 16 பெண்கள் அணி களும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. டென்மார்க், உக்ரைன், 16 முறை சாம்பிய னான சீனா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந் திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இன்று டென்மார்க்கையும், 2-வது ஆட்டத்தில் நாளை உக்ரைனையும், 27-ந் தேதி சீனாவையும் சந்திக்கிறது.

இந்திய பெண்கள் அணியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தன்வி ஷர்மா தேவிகா சிஹாக், உன்னதி ஹூடா, இஷா ராணி பரூவா உள்ளிட்டோர் இடம் பிடித்து இருக்கின்றனர். காயம் காரணமாக காயத்ரி-திரிஷா ஜாலி இணை விலகி இருப்பதாலும், கடினமான பிரி வில் இடம் பெற்று இருப்பதும் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com