பதக்கப் பட்டியலில் அனல் பறக்கும் போட்டி: இந்தியா - உஸ்பெகிஸ்தான்... 4-வது இடம் யாருக்கு?

இந்தியாவுக்கு இன்னும் 3 தங்கப் பதக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆசிய விளையாட்டு
Published on: 

டோக்கியோ,

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது உஸ்பெகிஸ்தான் 4-வது இடத்திலும், இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி:

உஸ்பெகிஸ்தான்- 21 தங்கப் பதக்கங்கள்

இந்தியா - 19 தங்கப் பதக்கங்கள்

இதனால், இந்தியா 4-வது இடத்தை நோக்கி முன்னேற வேண்டுமெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் கிடைக்கும் தங்கப் பதக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தியாவுக்கு எஞ்சியுள்ள 3 தங்கப் பதக்க வாய்ப்புகள்

இந்தியாவுக்கு இன்னும் 3 தங்கப் பதக்க வாய்ப்புகள் உள்ளன.

ஆண்கள் ஆக்கி இறுதிப் போட்டி

இந்தியா -மலேசியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆண்கள் ஆக்கி இறுதிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தைக் குறிவைக்கிறது.

அமன் ஷெராவத் - 57 கிலோ

ஆண்கள் 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் அமன் ஷெராவத் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் களமிறங்குகிறார்.

அந்திம் பங்கால் -53 கிலோ

பெண்கள் 53 கிலோ மல்யுத்தப் பிரிவில் அந்திம் பங்கால் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் போட்டியிடுகிறார்.

உஸ்பெகிஸ்தானுக்கு 2 தங்க வாய்ப்புகள்

மறுபுறம், உஸ்பெகிஸ்தானுக்கும் இன்னும் 2 தங்கப் பதக்க வாய்ப்புகள் உள்ளன:

மல்யுத்த இறுதிப் போட்டி

ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி இறுதிப் போட்டி

4-வது இடத்துக்கான கணக்கு

தற்போதைய தங்கப் பதக்க எண்ணிக்கையில் இந்தியா 19, உஸ்பெகிஸ்தான் 21 என உள்ள நிலையில், இந்தியா எஞ்சியுள்ள மூன்று தங்கப் பதக்க வாய்ப்புகளையும் வென்றால் அதன் எண்ணிக்கை 22 ஆக உயரும்.

அதே நேரத்தில், உஸ்பெகிஸ்தான் எஞ்சியுள்ள இரண்டு தங்கப் பதக்கப் போட்டிகளிலும் வெற்றி பெறாமல் இருந்தால், இந்தியா 4-வது இடத்தைப் பிடிக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com