டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா வெற்றி
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் கஜகஸ்தானின் தவுலத் நியாஜ்பெகோவ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று விளையாடினர்.

இதில், 8-0 என்ற புள்ளி கணக்கில் பூனியா வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் உடன் அரையிறுதியில் விளையாடி 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்த நிலையில், இன்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். இதனால் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com