டோக்கியோ ஒலிம்பிக்: முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி

குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் அசத்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக்: முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி
Published on

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

3-வது நாளான இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி பெற்றார். 51 கிலோ எடைப்பிரிவில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் அசத்தினார். முதல் சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com