பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரமோத் இறுதிபோட்டிக்கு தகுதி

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறினார்.
பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரமோத் இறுதிபோட்டிக்கு தகுதி
Published on

டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாராஒலிம்பிக் ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறினார்.

ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையரில் எஸ்.எல்.3 பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் (குரூப்ஏ) நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட்டில் ஜப்பான் வீரர் டைசுகி புஜிகராவை வீழ்த்தினார். இதன் மூலம் பிரமோத் பகத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

இறுதிபோட்டியில் பிரமோத் பகத் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரமோத் பகத் பெற்றுள்ளார். 33 வயதான பிரமோத் இடது கால் பாதிப்புக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com