

புடாபெஸ்ட்,
டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இந்த தொடர் கிளாசிக், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய 3 வகையான போட்டிகளை உள்ளடக்கியதாகும். இந்த போட்டியில் 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞா னந்தா, அர்ஜூன் எரிகைசி. ஆர்.வைஷாலி உள்பட 24 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தலா 6 பேர் வீதம் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'பாஸ்ட் கிளாசிக்' முறையில் நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் தொடர்ந்து 2 ஆட்டங் களில் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய முதலாவது ஆட்டத்தில் 44-வது நகர்த்தலிலும், கருப்பு நிற காய் களுடன் ஆடிய 2-வது ஆட்டத்தில் 57-வது நகர்த்தலிலும் டிரா கண்டார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி (டி பிரிவு) அமெரிக்காவின் ஹான்ஸ் நிமேனுடன் மோதிய முதல் இரு ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதேபிரி வில் அங்கம் வகிக்கும் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டர் மேக்சிம் வாஷிரை சந்தித்தார். முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த வைஷாலி, 2-வது ஆட்டத்தை டிரா செய்தார். 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இருவரும் மோதிய இரு ஆட்டமும் டிராவில் முடிந்தது.