

லாஸ் வேகாஸ்,
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் யு23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை அமிர்தா பூஜாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
யு23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 72 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அமிர்தா பூஜாரி, உக்ரைன் வீராங்கனை இரினா சப்லோட்ஸ்காவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்த அமிர்தா பூஜாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அமிர்தா பூஜாரி வென்ற வெள்ளிப் பதக்கத்தின் மூலம், இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே பெண்களுக்கான 59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை கோமல் வெண்கலப் பதக்கமும் கிரிகோ-ரோமன் மல்யுத்தத்தின் 55 கிலோ எடைப் பிரிவில் விஸ்வஜித் மோரே வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தனர்.