பளுதூக்குதல் வீரர்களை பாராட்டிய மத்திய மந்திரி

காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் இந்தியா 8 பதக்கங்களை கைப்பற்றியது.
பளுதூக்குதல் வீரர்களை பாராட்டிய மத்திய மந்திரி
Published on

புதுடெல்லி,

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த விளையாட்டு திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 70 தங்கம் உள்பட 171 பதக்கங்கள் குவித்து முதலிடமும், இங்கிலாந்து (110 பதக்கம்) 2-வது இடமும், கனடா 3-வது இடமும் (62 பதக்கம்) பிடித்தது. இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பெற்றது. குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் இந்தியா 8 பதக்கங்களை (ஒரு தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம்) கைப்பற்றியது. பளுதூக்குதல் வீரர்களை மத்திய விளையாட் டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். தங்கம் வென்ற மீராபாய் சானுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார். இதே போல் வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு முறையே ரூ.20 லட் சம். ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com