

பர்னோ,
செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
செக் குடியரசின் பர்னோ நகரில் நடைபெற்ற செக் ஓபன் 2026 ஸ்குவாஷ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 4-ம் நிலை வீரரான வேலவன் செந்தில்குமார், கிரெக் லோபனை எதிர்கொண்டார்.
இதில் வேலவன் 13-11 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வேலவன், 2-வது செட்டை 11-5 என வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதற்கு பதிலடி கொடுத்த லோபன் 3-வது செட்டை 11-8 எனக் கைப்பற்றினார்.
ஆனால், 4-வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய வேலவன் 11-7 என வெற்றி பெற்றார். இதன் மூலம் 13-11, 11-5, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் வேலவன் செந்தில்குமார் தனது சர்வதேச பிஎஸ்ஏ ஸ்குவாஷ் சுற்றுப் போட்டிகளில் 12-வது பட்டத்தைக் கைப்பற்றினார்.
சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வேலவன் செந்தில்குமார் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும், இந்திய ஆண்கள் அணியின் சார்பிலும் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.