

லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-7 (9-11), 2-6 என்ற நேர்செட்டில் 21 வயது அலெக்சாண்ட்ரா ஈலாவிடம் (பிலிப்பைன்ஸ்) அதிர்ச்சிகரமாக தோற்று நடையை கட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் ஈலா கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார்.