பெண்கள் ஆக்கி: இந்தியா தோல்வி

இந்த போட்டி தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
பெண்கள் ஆக்கி: இந்தியா தோல்வி
Published on

பெர்த்,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தியா-ஆஸ்தி ரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

இந்த போட்டி தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது, 3-வது ஆட்டங்களில் இந்தியாவும் வென்றிருந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com