உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அசத்தல் வெற்றி

பி.வி.சிந்து முதல் சுற்றில் கலோயானா நல்பந்தோவாவுடன் மோதினார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பாரீஸ்,

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பல்கேரியாவின் கலோயானா நல்பந்தோவா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 23-21 மற்றும் 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com