

புதுடெல்லி,
30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நேற்று முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் - ருமேனியா வீரர் காலின்ஸ் பிலிமன் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 16-21, 21-8,21-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.