

புதுடெல்லி,
30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி யில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையரில் இந்திய 'இளம் புயல்' உன்னதி ஹூடா 22-20, 21-16 என்ற நேர் செட்டில் தெட் ஹிதர் துஜாரை (மியான்மர்) வீழ்த்தினார். 2-வது சுற்றில் உன்னதி கனடாவின் மிட்செல் லீயை சந்திக்கிறார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 2-வது சுற்றில் 21-15. 21-12 என்று நேர் செட்டில் அமெரிக்காவின் லாரென் லாம் - அலிசன் லீ இணையை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய 3-வது சுற்றை எட்டியது. அதேசமயம் கவிபிரியா செல்வம்- சிம்ரன் சிங், கலப்பு இரட்டையரில் அஷித் சூர்யா- அம்ருதா, கேத் ருத்விகா- ரோகன் கபூர் ஆகிய இந்திய ஜோடிகள் தோற்று வெளியேறின.