உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற திரிஷா-காயத்ரி ஜோடி

சீனாவின் லியு ஷெங் ஷூடேன் நிங் ஜோடியிடம் போராடி வீழ்ந்து வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற திரிஷா-காயத்ரி ஜோடி
Published on

புதுடெல்லி,

30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-18, 13-21, 8-21 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான சீனாவின் லியு ஷெங் ஷூடேன் நிங் ஜோடியிடம் போராடி வீழ்ந்து வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது.

இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கோடை நரோகா (ஜப்பான்)-அலெக்ஸ் லானிர் (பிரான்ஸ்) மோதுகின்றனர். பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அன்சே யங் (தென்கொரியா)-அகானே யமாகுச்சி (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com