

இந்த போட்டியில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு அமித் முன்னேறியுள்ளார். அடுத்து ஈகுவடார் நாட்டின் கார்லோஸ் குயிப்போ உடன் அவர் மோதுகிறார்.
இதேபோன்று ஆடவர்களுக்கான 56 கிலோ எடை பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இந்தியாவின் கவுரவ் பிதூரி ஆஸ்திரேலியா நாட்டின் சாம் குட்மேனுடன் மோதினார். உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் மற்றும் ஓசானியா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான குட்மேனை வீழ்த்தி 2வது சுற்றுக்கு கவுரவ் முன்னேறியுள்ளார்.
அந்த போட்டியில், ஆப்பிரிக்க சாம்பியன் பட்டம் வென்ற மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ஜீன் ஜார்டி வடமூட்டூவுடன் மோதுவார்.