உலக குத்துச்சண்டை கோப்பை: முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த ஹிதேஷ்

உலக குத்துச்சண்டை கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பிரேசிலியா,

உலக குத்துச்சண்டை கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த 130 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் 70 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீரர் ஹிதேஷ் 5-0 என்ற கணக்கில் பிரான்சின் மகான் டிராரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் ஒடெல் கமாராவை சந்திக்கிறார்.

இதன் மூலம் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஹிதேஷ் படைத்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com