உலக கேரம் போட்டி: 3 தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை... முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

உலக கேரம் போட்டியில் தமிழக வீராங்கனை 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலக கேரம் போட்டி: 3 தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை... முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
Published on

கலிபோர்னியா,

6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். காசிமா சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசிமாவுக்கு தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், " அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com