உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்-சிந்தாரோவ் ஆட்டம் ‘டிரா’

இளம் வயது வீரர்கள் மோதும் போட்டியாக இது அமைந்துள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்-சிந்தாரோவ் ஆட்டம் ‘டிரா’
Published on: 

ஜெனிவா,

குகேஷ் (இந்தியா) ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட் சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று தொடங்கியது. இருவருக்கும் வயது 20. இதன் மூலம் 140 ஆண்டு கால உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகவும் இளம் வயது வீரர்கள் மோதும் போட்டியாக இது அமைந்துள்ளது.

டிரா

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதலில் 7.5 புள்ளியை எட்டும் வீரர் மகுடம் சூடுவார். நேற்றைய முதல் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், கருப்பு நிறகாய்களுடன் களம் கண்டார். சிந்தாரோவ் ராஜாவுக்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்த (இ4), குகேசும் அதேபோல் ராஜாவுக்கு முன் உள்ள சிப்பாயை இரு கட்டம் எடுத்து வைத்தார். தொடர்ந்து குதிரை மற்றும் மந்திரிகளின் நகர்த்தல்களால் ஆட்டம் 'ரூய் லோபஸ்' திறப்பு முறைக்கு சென்றது. 8-வது நகர்த்தலில் பரஸ்பரமாக ராணியை விட்டுக்கொடுத்தனர்.

38-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதாவது ஒரே மாதிரியான நகர்த்தல்களை மூன்று முறை திரும்ப செய்தல் என்ற விதியின் மூலம் 38-வது நகர்த்தலில் குகேஷ் டிரா செய்தார். இதையடுத்து இவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

X