உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்று ஆட்டமும் ‘டிரா’

இதில் முதல் சுற்று ஆட்டம் 38-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்று ஆட்டமும் ‘டிரா’
Published on: 

ஜெனிவா,

குகேஷ் (இந்தியா)- ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட் சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் சுற்று ஆட்டம் 38-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

தமிழக கிராண்ட்மாஸ்டர்

இந்த நிலையில் நேற்று 2-வது சுற்றில் தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இருவரும் டிரா செய்யும் நோக்குடனே காய்களை நகர்த்தினர். 20-வது நகர்த்தலிலேயே ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. அதாவது இருவரும் பிஷப் மற்றும் குதிரையை வைத்து ஒரே மாதிரியான நகர்த்தலை 3 முறை திரும்ப திரும்ப செய்ததால் அதன் அடிப்படையில டிரா செய்யப்பட்டது.

இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இன்று 3-வது சுற்று நடக்கிறது. இதில் குகேஷ் கருப்புநிற காய்களுடன் ஆடுவார்.

X