உலக செஸ் சாம்பியன்ஷிப்: 4-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது

இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 4-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது
Published on: 

ஜெனிவா,

நடப்பு சாம்பியன் குகேஷ் (இந்தியா) ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முத லாவது சுற்று 38-வது நகர்த்தலிலும், 2-வது சுற்று 20-வது நகர்த்தலிலும் 'டிரா' ஆனது.

இந்த நிலையில் 3-வது சுற்று போட்டி நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இதில் கருப்புநிற காய்களுடன் களம் கண்ட குகேஷ், 'பெர்லின் தற்காப்பு' முறையில் ஆட்டத்தை தொடங்கினார். 17-வது நகர்த்தலில் இருவரும் பரஸ்பரமாக ராணியை வெட்டுக் கொடுத்தனர்.

செஸ்

நேரத்தை மிச்சப்படுத்துவதில் குகேசை விட சிந்தாரோவ் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார். 21-வது நகர்த்தலின் போது, 60 நிமிடங்களுக்கு மேல் குகேசிடம் நேரம் இருந்தது. ஆனால் சிந்தா ரோவ் வசம் 35 நிமிடங்களே இருந்ததால், துரிதமாக காய்களை நகர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு 60-வது நகர்த்தலில் இருவரும் 'டிரா'வில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது குகே சிடம் 5 காய்களும், எதிராளியிடம் 4 காய்களும் மீதம் இருந்தன. இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. தற்போது 1.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சமனில் உள்ளனர். போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 4-வது சுற்றில் தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவார். 'டிரா' நிலையை உடைத்து யார் வெற்றிக் கணக்கை தொடங்கப்போகிறார்கள்? என்பதே செஸ் ஆர்வலர்களின் எதிர் பார்ப்பாகும்.

X