உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’

உலக செஸ் போட்டியில், கார்ல்சென் மீண்டும் டிரா செய்தார்.
உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’
Published on

லண்டன்,

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 12 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரருக்கு மகுடம் கிட்டும்.

முதல் 2 சுற்றுகள் டிரா ஆன நிலையில் 3-வது சுற்று நேற்று முன்தினம் நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49-வது நகர்த்தலில் டிரா கண்டார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் நீடித்தது. இந்த முடிவு திருப்தி அளித்தாலும், தனது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது என்று கார்ல்சென் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com