உலகக் கோப்பை வில்வித்தை: வெண்கலம் வென்ற இந்திய வீரர்

டென்மார்க்கின் மார்ட்டின் டாம்ஸ்போவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

உலகக் கோப்பை வில்வித்தை:  வெண்கலம் வென்ற இந்திய வீரர்
Published on

ஷாங்காய்,

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவின் ஷாங்காய் நக ரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரி வில் நேற்று நடந்த வெண்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் சஹில் ஜாதவ் 147-144 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க்கின் மார்ட்டின் டாம்ஸ்போவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மராட்டி யத்தை சேர்ந்த 25 வயதான சஹில் ஜாதவ் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com