டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து

டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து
Published on

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா பீதியால் இந்த போட்டி மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி மே 5-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்ட இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

இதே போல் பேட்மிண்டன் போட்டிகள் அனைத்தும் ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் நடக்க இருந்த ஆஸ்திரேலிய ஓபன், தாய்லாந்து ஓபன், இந்தோனேஷிய ஓபன் ஆகிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பல ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளும் ரத்தாகியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com