உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள்

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநிலம் யுஜின் நகரில் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை நடை பெறுகிறது.
தடகள சாம்பியன்ஷிப்
Published on

சென்னை,

உலக ஜூனியர் (20வய துக்குட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநிலம் யுஜின் நகரில் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை நடை பெறுகிறது.

இந்திய அணியில்

இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியில் மொத்தம் 36 பேர் இடம் - பெற்றுள்ளனர். இதில் 30 சதவீத பங்களிப்பை தமிழகம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக ஜூனியர் தடகள பங்கேற்கும் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர்-வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

யூவின் ஆனந்த் (800 மீட்டர் ஓட்டம்), ஜித்தின் அர்ஜூனன் (நீளம் தாண்டுதல்), நீல்ஸ் சாம்ராஜ் (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), ரஞ்சித்குமார், நகுல் பிரபு, (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்), தரணிதரன் (ஈட்டி எறிதல்), அம்ரிஷ் (உயரம் தாண்டுதல்), ரோய்ஷன் (டிரிபிள் ஜம்ப்), பவானா (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), தியா (4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்).

X

Daily Thanthi
www.dailythanthi.com