உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம்.....விவான் கபூர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தங்கப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க 'ஷூட்-ஆப்' கடைபிடிக்கப்பட்டது.
உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம்.....விவான் கபூர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Published on: 

தோகா,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகா வில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான டிராப் இறுதி சுற்றில் இந்திய வீரர் விவான் கபூர். குவைத் வீரர் அப்துல் ரஹ்மான் அல்பை ஹான் இடையே கடும் போட்டி நிலவியது. வழக்கமான சுற்று முடிவில் இருவரும் 30-க்கு 29 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.

விவான் கபூர்

இதனால் தங்கப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க 'ஷூட்-ஆப்' கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் இரு வாய்ப்பிலும் இருவரும் துல்லியமாக சுட்டனர். 3-வது வாய்ப்பை விவான் கபூர் தவறவிட்டார். ஆனால் அந்த வாய்ப்பை அப்துல் ரஹ்மான் புள்ளியாக மாற்றியதால் விவான் கபூர் 2-3 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் டிராப் பிரிவில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். குவைத் வீரர் அப்துல் ரஹ்மான் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். சீனா வின் கி யிங் (22 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய ஜெய்ப்பூரை சேர்ந்த 24 வயது விவான் கபூர் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கோட்டாவையும் உறுதி செய்தார். துப்பாக்கி சுடுதலில் அந்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 3-வது இந்தியர் ஆவார்.

X