உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியீடு

உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியாகி உள்ளது.
உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியீடு
Published on

புதுடெல்லி,

உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா-அர்ச்சனா காமத் இணை 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியின் சிறந்த தரநிலை இதுவாகும்.

இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா-சத்யன் ஜோடி 4 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணையின் சிறந்த தரநிலையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 6 இடம் உயர்ந்து 50-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சத்யன் (சென்னை) 5 இடம் முன்னேற்றம் கண்டு 33-வது இடத்தை பிடித்து இருக்கிறார். மற்றொரு இந்திய வீரர் சரத்கமல் 2 இடம் சறுக்கி 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com