உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் வெண்கலம் வென்று அசத்தல்

நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ஜாக்ரெப்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில், வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரெனை (சுவீடன்) சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அன்திம் 9-1 என்ற புள்ளி கணக்கில் எம்மா ஜோனாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com