உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய வீராங்கனை தனு 9-5 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் பிரிசியஸ் ரோசன்னா பெல்லை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Published on: 

அஸ்தானா,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா வில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 10-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் அல்டின் ஷகயேவாவை தோற்கடித்து இறுதிப்போட் டிக்கு முன்னேறினார்.

நடப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீராங்கனையான மனிஷா உலக சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட் டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இறுதி ஆட்டத்தில் பான் அமெரிக்க சாம்பியன் அபிகைல் எலிசபெத் நெட்டியை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார். 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தனு 9-5 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் பிரிசியஸ் ரோசன்னா பெல்லை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

X