உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் தங்கம் வென்றார்

சக நாட்டு வீரர் ரித்விக் குப்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் தங்கம் வென்றார்
Published on: 

சென்னை,

உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டி போஸ்வானா நாட்டில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சென்னை வீரர் நிகில் மன்னத் 5-11, 11-7, 11-9, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் ரித்விக் குப்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நிகில் மன்னத்

அத்துடன் அவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். நிகிலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X