இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்த தன்வி பத்ரி

ஒரு மணிநேரம் மற்றும் 22 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், 15-21, 21-13, 26-24 என்ற செட் கணக்கில் ஜாங் வெற்றி பெற்றார்.

இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்த தன்வி பத்ரி
Published on: 

தகார்

இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்று தன்வி பத்ரி வரலாறு படைத்துள்ளார்.

செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடப்பு உலக ஜூனியர் சாம்பியனான ஜாங் யி ஜின் மற்றும் 15 வயது இந்திய வீராங்கனையான தன்வி பத்ரி இருவரும் தங்கம் வெல்வதற்கான போட்டியில் விளையாடினர்.

வெள்ளி பதக்கம்

மொத்தம் ஒரு மணிநேரம் மற்றும் 22 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், 15-21, 21-13, 26-24 என்ற செட் கணக்கில் ஜாங் வெற்றி பெற்றார். தன்வி 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

இதனால், இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு தன்வி பத்ரி சொந்தக்காரியானார்.

4-வது நபர்

இதுபற்றி இந்திய பேட்மிண்டன் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், இளையோர் ஒலிம்பிக்கில், 2010-ம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த போட்டியில் எச்.எஸ். பிரணாய் வெள்ளி பதக்கம் வென்றார். இதேபோன்று 2018-ம் ஆண்டில் லக்சயா சென் 2-வது இடம் பெற்றார்.

2014-ம் ஆண்டில் ஆதித்ய ஜோஷி ஆண்களுக்கான தனிநபர் அரையிறுதிக்கு முன்னேறியபோதும் பதக்கம் பெறாமல் நாடு திரும்பினார் என தெரிவித்து உள்ளது. இந்த 3 பேர் வரிசையில் 4-வது நபராக தன்வி இணைந்துள்ளார் என தெரிவித்து உள்ளது.

X