ஜெகன்நாத் ரத யாத்திரையின்போது ஜப்பான் ஓபன் தொடரை வென்றது மகிழ்ச்சி - பிவி சிந்து

ஜப்பான் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜெகன்நாத் ரத யாத்திரையின்போது ஜப்பான் ஓபன் தொடரை வென்றது மகிழ்ச்சி - பிவி சிந்து
Published on

புவனேஷ்வர்,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பான் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்துவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிவி சிந்துவுக்கு ஒடிசா முன்னாள் முதல்-அமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பிவி சிந்து மகிழ்ச்சி

இதையடுத்து நவீன் பட்நாயக்கிற்கு நன்றி தெரிவித்த பி.வி.சிந்து, ஜெகன்நாத் ரத யாத்திரையின்போது ஜப்பான் ஓபன் தொடரை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே கவித்துவமான பூரி ரத யாத்திரையின்போது ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ரத யாத்திரைக்கு விரைவில் வந்து பூரி ஜெகன்நாதரை தரிசனம் செய்ய ஆவலாக உள்ளேன் என்றும் பிவி சிந்து தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com