அடிலெய்டு டென்னிஸ்: மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி

மேடிசன் கீஸ் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
அடிலெய்டு டென்னிஸ்: மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி
Published on

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ரஷியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கீஸ் 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com