

பிரான்சில் நடைபெற்று வரும் ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அல்காரஸ், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தினார். இதன் மூலம் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்ஸ் வீரர் லூகா வான் ஆஷை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை லூகா வான் ஆஷ் 7-5 எனக் கைப்பற்றினார்.
இதையடுத்து சிறப்பாக விளையாடிய பென் ஷெல்டன், அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்காரஸ், பென் ஷெல்டன் ஆகியோர் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்ல இருவரும் களமிறங்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.