2027-ல் டாப் 10-க்குள் நுழைவாரா ஈலா? - முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீரர் கணிப்பு

தற்போது உலகத் தரவரிசையில் ஈலா19-வது இடத்தில் உள்ளார்.
அலெக்ஸ் ஈலா
Published on: 

டோக்கியோ,

2027-ல் டாப் 10 இடத்தை ஈலா பிடிப்பார் என்று முன்னாள் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியாளரான கிரெக் ரூசெட்ஸ்கி கணித்துள்ளார்.

வாஷிங்டன் ஓபன்

பிலிப்பைன்ஸ் டென்னிஸ் வீராங்கனை ஈலா, 2026-ஆம் ஆண்டில் தனது முதல் டபில்யூ.டி.ஏ பட்டத்தை வாஷிங்டன் ஓபனில் வென்றதுடன், விம்பிள்டனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறினார்.

2027-ல் பெரிய முன்னேற்றம்

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியாளரான கிரெக் ரூசெட்ஸ்கி, 2027-ஆம் ஆண்டு ஈலாவுக்கு மிகப்பெரிய ஆண்டாக அமையும் என்று கணித்துள்ளார். உலகத் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மரியா ஷரபோவாவுடன் ஒப்பீடு

ஈலாவின் திறமையையும், டென்னிஸில் அவர் காட்டும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ரூசெட்ஸ்கி, முன்னாள் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவுடன் அவரை ஒப்பிட்டார். விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தினாலும், டென்னிஸுக்கு ஈலா முதலிடம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

டோக்கியோ ஓபனில் அடுத்த சவால்

தற்போது உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள ஈலா, டோக்கியோ ஓபனில் அடுத்ததாக டாலியா கிப்சனை எதிர்கொள்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், தரவரிசையில் 14-வது இடம் வரை முன்னேற வாய்ப்புள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com