ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டயானா

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டயானா
Published on: 

டோக்கியோ,

ஜப்பானில் நடைபெற்று வரும் டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

முதல் செட்டை வென்ற ஈலா

காலிறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலாவும், ரஷியாவின் டயானா ஷ்னைடரும் மோதினர். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஈலா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஷ்னைடர் ஆதிக்கம்

இதையடுத்து சுதாரித்து கொண்ட ஷ்னைடர், தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தார். பரபரப்பாக நடைபெற்ற 2-வது செட்டை 7-6 (7-5) என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 3-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 2-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற டயானா ஷ்னைடர் அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டை வென்றும் அடுத்த இரு செட்களிலும் தோல்வியடைந்த அலெக்சாண்ட்ரா ஈலா தொடரிலிருந்து வெளியேறினார்.

X